Chennai: பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிரூபணம் ஆனால் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Chennai: பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிரூபணம் ஆனால் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Published on: February 13, 2025 at 3:37 pm
தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆசிரியர்கள் ஊழியர்கள் மீதான போக்ஸ் வழக்கில் குற்றம் நிரூபணம் ஆனால் அவர்களின் கல்வி சான்றிதழ்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்’ என எச்சரித்துள்ளார்.
மேலும் பள்ளிகளில் பாலியல் புகார்கள் கூறப்பட்டால் இது தொடர்பாக உடனடியாக நேரடியாக சென்று ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்; அந்தப் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? பரிந்துரைகள் என்ன என்பதை உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான அனைத்து தகவல்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உடனடியாக செல்ல வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்சி வருகின்றன. அண்மையில் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மூன்று ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 23 வயதான மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.
இதற்கிடையில் சென்னையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் திண்டுக்கல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்த விவாகரங்களில் கடும் நடவடிக்கை தேவை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான போக்ஸ் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களின் கல்விச் சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கிரிக்கெட் பயிற்சியில் இறங்கிய மேயர் பிரியா.. வைரல் வீடியோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com