Puducherry DMK protest: புதுச்சேரியில் திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
Puducherry DMK protest: புதுச்சேரியில் திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
Published on: February 13, 2025 at 3:55 pm
Updated on: February 13, 2025 at 4:14 pm
புதுச்சேரியில் திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர 500க்கும் மேற்பட்ட தொண்டர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் செமஸ்டர் வினாத்தாள் மாற்றப்பட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது மத்திய பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் வினாத்தாள்கள் மாற்றப்பட்டன என திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுகவினர் தங்களது கட்சி கொடியை பிடித்தவாறு, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் படம் பொறித்த பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த விவாகரத்தில் மாணவர்களுக்கு நீதி வேண்டும் என்றும்; குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள். இந்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : பள்ளிகளில் பாலியல் தொந்தரவு.. கல்விச் சான்றிதழ் ரத்து.. அமைச்சர் மகேஷ் அதிரடி உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com