Chennai BSNL female employee death: காதலியின் தாயை கழுத்தை நெரித்து காதலன் கொன்ற கொடூர சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ஜே ஜே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Chennai BSNL female employee death: காதலியின் தாயை கழுத்தை நெரித்து காதலன் கொன்ற கொடூர சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ஜே ஜே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on: February 13, 2025 at 2:24 pm
சென்னை: சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ஜெ. மைதிலி; 63 வயதான இவர் பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். இவருக்கு ரித்திகா என்ற 24 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
ரித்திகா கல்லூரி படிக்கும் காலத்தில் அவருக்கு ஷியாம் கண்ணன் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
ரித்திகாவும் ஷியாமம் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனைக் கைவிட தாயார் மைதிலி வலியுறுத்தியுள்ளார். மைதிலி தனது கணவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் ரித்திகா தனது காதலை கைவிட மறுத்து வந்துள்ளார்.
இதனால் தாயார் மைதிலிக்கும் மகள் ரித்திகாவுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தற்போது ரித்திகா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இதற்கிடையில், திங்கள் கிழமை இரவு ரித்திகா வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். அப்போது ரித்திகாவுக்கும் தாயார் மைதிலிர்க்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ரித்திகா ஷியாமுக்கு போன் செய்து அவருடன் செல்ல துணிந்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மைதிலி தனது மகளை ஒரு கட்டத்தில் சமாதானப்படுத்த முயன்றார். இதற்கிடையில் அந்த இடத்திற்கு ஷியாமும் வந்துள்ளார்.
தனது மகளை ஷாமுடன் செல்ல மைதிலி அனுமதிக்கவில்லை. இதனால் இங்கிருந்து வெளியே செல் என மைதிலி ஆத்திரத்தில் கத்தி உள்ளார். அப்போது கடும் கோபத்தில் இருந்த ஷ்யாம் மைதிலியின் கழுத்தை நெரித்து கொன்றார் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷியாம் சிவகாசியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பிஏ பட்டதாரியான ஷியாம் வேலை எதுவும் பார்க்காமல்; போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறார் என கூறப்படுகிறது.
காதலியின் தாயை இளைஞர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க திசையன்விளை: இளைஞர் மீது பாய்ந்த போக்சோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com