Prime Minister Modi meets Tulsi Gabbard: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் துளசி கப்பார்டை சந்தித்தார். அப்போது, அவரை இந்தியா-அமெரிக்க நட்பின் வலுவான ஆதரவாளர் என்று அழைத்தார்.
Prime Minister Modi meets Tulsi Gabbard: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் துளசி கப்பார்டை சந்தித்தார். அப்போது, அவரை இந்தியா-அமெரிக்க நட்பின் வலுவான ஆதரவாளர் என்று அழைத்தார்.
Published on: February 13, 2025 at 12:12 pm
Updated on: February 13, 2025 at 2:49 pm
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்துப் பேசினார். அப்போது, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களில் உளவுத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்து விவாதித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதித்தார்.
தொடர்ந்து, நாட்டின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்காக இந்து-அமெரிக்கரான கப்பார்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
கப்பாட் இந்தப் பதவியை புதன்கிழமை ஏற்றிருந்தார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பாட் -ஐ வாஷிங்டன் டிசியில் சந்தித்தேன். அவரது பதவியேற்புக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
இந்தியா-அமெரிக்கா நட்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தேன். அவர் எப்போதும் ஒரு வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களில் உளவுத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இதுவே சரியான நேரம்: இந்தியாவுக்கு தொழில் தொடங்க வாருங்கள்; பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com