Pariksha Pe Charcha 2025: பரிக்ஷா பே சர்ச்சா 2025 நிகழ்ச்சியில் மன அழுத்தம் குறித்து தீபிகா படுகோனே பேசினார். அப்போது, ‘இது எப்படி நடக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்’ என்றார்.
Pariksha Pe Charcha 2025: பரிக்ஷா பே சர்ச்சா 2025 நிகழ்ச்சியில் மன அழுத்தம் குறித்து தீபிகா படுகோனே பேசினார். அப்போது, ‘இது எப்படி நடக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்’ என்றார்.
Published on: February 12, 2025 at 4:26 pm
பரிக்ஷா பே சர்ச்சா 2025 நிகழ்ச்சியின் போது, நடிகை தீபிகா படுகோனே தனது மன அழுத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, ஒரு நாள் மயக்கம் அடையும் வரை தான் எப்படி கடினமாக உழைத்தேன் என்பதை நினைவு கூர்ந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, தான் மன அழுத்தத்தால் போராடுவதை உணர்ந்தார் என்றும் தெரிவித்தார். மேலும், தீபிகா தனது உணர்வுகளைப் பற்றி நீண்ட காலமாகப் பேசாமல் இருந்ததை விளக்கினார்.
அப்போது, நான் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் என் அம்மா வந்தபோது, நான் அழ ஆரம்பித்தேன். எனக்கு என்ன செய்வது அல்லது எப்படி வாழ்வது என்று தெரியவில்லை என்றார்.
தொடர்ந்து, மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்க மாணவர்களை தீபிகா ஊக்குவித்தார். மேலும், அவர்களை ஊக்குவிக்க, மாணவர்களுடன் ஒரு வேடிக்கையான விளையாட்டை விளையாடினார்.
கணக்கு பாடம் குறித்து..
அப்போது தீபிகா படுகோன், நான் மிகவும் குறும்புக்காரக் குழந்தை. நான் எப்போதும் மேசைகள், நாற்காலிகள் மற்றும் சோஃபாக்களில் ஏறி அதிலிருந்து குதிப்பேன் என்றார்.
மேலும், தேர்வுகளின் போது நான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன், குறிப்பாக நான் கணிதத்தில் பலவீனமாக இருந்தேன் என்றார்.
மேலும் தற்போதுவரை தாம் கணக்கு பாடத்தில் போராடுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : அடுத்த வாரம் ஹால் டிக்கெட்.. 11, 12 மாணாக்கர்கள் நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com