சென்னையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Published on: February 12, 2025 at 12:59 pm
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42 ஆவது வணிகர் தினம் மே ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வணிக மாநாடு மதுராந்தகத்தில் நடைபெறுகிறது.
இந்த வணிகர் அதிகார பிரகடன மாநாட்டை முன்னிலைப்படுத்தி, மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் விழிப்புணர்வை முன்னெடுத்திட இந்த பிரம்மாண்டமான மாரத்தான் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியத்திடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் நேரில் அழைப்பு விடுத்தனர்.
அப்போது பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா, சென்னை மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஏ எம் வி பிரதாப் ராஜா, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர் கோட்டி, ஆர் வினோத், மணிகண்டன், காட்வின் ராஜ், காமராஜ், சதீஷ், தாமு, பழனி, மனோஜ் பிரபாகரன், சுரேஷ், விக்னேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க மாத்தூர் தொட்டிப் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு சேதம்.. காங்கிரஸ் கடும் கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com