சுவை நாவிலேயே நிற்கும் ; எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ; இப்படி செஞ்சு அசத்துங்க!

How to make Ennai Kathirikkai Kulambu | சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்படி பண்ணுங்க.

Published on: January 21, 2025 at 8:53 am

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு : ஹோட்டல் ஸ்டைலில் ருசியான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

கத்தரிக்காய் – ½ கிலோ
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கடுகு -1 டீஸ்பூன்
வெந்தயம் -¼ டீஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
சின்ன வெங்காயம் – ½ கப்
பூண்டு – 6 பல்லு
பெருங்காயத்தூள் -¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் -½ டீஸ்பூன்
மல்லித்தூள் -1 டேபிள் ஸ்பூன்
சீரகம், மிளகு சேர்த்து அரைத்த தூள் – 1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் -1 டீஸ்பூன்

அரைக்க வேண்டியவை

நல்லெண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு
பூண்டு – ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி -1 துண்டு
தக்காளி – 1
தேங்காய் -3 துண்டு

செய்முறை

கத்திரிக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து கத்திரிக்காயின் முனையில் நான்காக கீரி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்க கூடாது. ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் 50 சதவீதம் வெந்த பின்னர் வேறு பாத்திரத்தில் மாற்றவும்.

கத்தரிக்காய் பொரித்த எண்ணெயிலேயே ஒரு கைப்பிடி சிறிய வெங்காயம், ஒரு கைப்பிடி அளவு பூண்டு, இஞ்சி, தக்காளி, தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மை போன்று நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும். பின்னர் இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் தேவையன அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அடுப்பு தீயை லோ ஃப்ளேமில் வைத்து இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் சீரகம் மற்றும் மிளகு சம அளவு எடுத்து அரைத்து அதில் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் இதனுடன் ஏற்கனவே வதக்கி அரைத்த விழுதினை சேர்த்து நன்கு வதக்கவும். இவை நன்கு வதங்கிய பின்னர் சிறிது புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கிரேவியில் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் வதக்கி வைத்த கத்தரிக்காய் சேர்த்து அடுப்பு தீயை லோ ஃபிளேமில் வைத்து மீண்டும் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும். இப்போது எண்ணெய் பிரிந்து கத்திரிக்காய் வெந்து சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.

இதையும் படிங்க  சட்டுனு செய்யக்கூடிய மோர்க்குழம்பு; இப்படி ட்ரை பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com