நாட்டின் தேசிய தலைநகரில் இன்றும் நாளையும் ஆட்டோ ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர் சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தம் காரணமாக டெல்லி-என்சிஆர் ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய தேதிகளில் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.தொழிற்சங்கங்கள் ஓலா மற்றும் உபெர் உள்ளிட்ட ஆப்-அடிப்படையிலான கேப் சேவைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த போராட்டத்தில் டெல்லி-என்சிஆரை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த தொழில்சங்கங்கள், மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து கவலைகளை எழுப்பினர்.இதுகுறித்து டெல்லி ஆட்டோ டாக்சி டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் யூனியன் தலைவர் கிஷன் வர்மா, “ஓலா, உபெர் போன்ற நிறுவனங்கள் குறித்து பல ஆண்டுகளாக அரசு மற்றும் துறைகளுக்கு கடிதம் எழுதி வருகிறோம், ஆனால் யாரும் கேட்கவில்லை” என்றார். மேலும், “ஆப்-அடிப்படையிலான கேப் சேவைகளை தடை செய்ய பரிந்துரைத்த அவர், “எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இ-ரிக்ஷா மற்றும் தனியார் நம்பர் பிளேட்கள் கொண்ட பைக்குகள் சாலைகளில் ஓடுகின்றன” என்றார். வாட்ஸ்அப்பில் தொடர https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h