பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த நாக் அஸ்வினின் கல்கி 2898 AD இரு வேறு ஒடிடி தளத்தில் வெளியாகிறது. பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த நாக் அஸ்வினின் பிளாக்பஸ்டர் அறிவியல் புனைக்கதை கல்கி 2898 AD. இந்தப் படம் தற்போது ஒடிடி தளத்துக்கு வந்துள்ளது. அதன்படி, இது நெட்ஃபிக்ஸ் இந்தியா மற்றும் பிரைம் வீடியோ இந்தியா இரண்டிலும் கிடைக்கிறது. அதாவது, கல்கியின் இந்தி பதிப்பு 2898 AD நெட்ஃபிக்ஸ் இந்தியாவில் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கிறது. இருப்பினும், அதன் அசல் தெலுங்கு பதிப்பு, பிற பிராந்திய மொழிகளான – தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் – பிரைம் வீடியோ இந்தியாவில் கிடைக்கும். வழக்கமாக, கல்கி 2898 AD போன்ற பான்-இந்தியா திரைப்படம் அனைத்து மொழிகளிலும் ஒரே ஒடிடி பிளாட்பார்மில் கிடைக்கும். ஆனால் இந்த படம் விதிவிலக்காக வெளிவந்துள்ளது. அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பிரபாஸ், கமல்ஹாசன், திஷா பதானி, அன்னா பென், சாஸ்வதா சாட்டர்ஜி, ஷோபனா மற்றும் சில நடிகர்கள் கேமியோ ரோலில் படத்தில் நடித்துள்ளனர். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த பெரிய பட்ஜெட் திரைப்படம் ஜூன் 27 அன்று நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்து, இப்படம் 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது, இது உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ₹1,100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.