Melania Trump: மெலனியா டிரம்பின் மஞ்சள் நிற ஸ்டேட் டின்னர் கவுன் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Melania Trump: மெலனியா டிரம்பின் மஞ்சள் நிற ஸ்டேட் டின்னர் கவுன் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Published on: September 18, 2025 at 6:26 pm
லண்டன், செப்.18, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலனியா டிரம்ப் இங்கிலாந்து மாநில விருந்தில் கலந்துகொண்டார். இந்த விருந்தை மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் நடத்தினர். இந்த ராஜ விருந்தானது, விண்ட்சர் கோட்டையில் நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் உடன் மெலேனியா ட்ரம்பும் கலந்துகொண்டார்.
அப்போது, இளஞ்சிவப்பு பெல்ட்டுடன் கூடிய தடிமனான தோள்பட்டை இல்லாத கரோலினா ஹெர்ரெரா மஞ்சள் நிற கவுனை அணிந்திருந்தார். இந்நிலையில், 55 வயதான அவரது ஃபேஷன் தேர்வு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது, பலர் அதற்கு வெறுப்பை வெளிப்படுத்தினர். குறிப்பாக, மஞ்சள் நிறம் விமர்சிக்கப்பட்டது.
இதையும் படிங்க : சார்லஸ் கிரிக் படுகொலையை கேலி செய்த மாணவர்.. தீயாய் பரவும் வீடியோ.. அமெரிக்காவில் பரபரப்பு!
நெட்டிசன்கள் கருத்து
பெரும்பாலான நெட்டிசன்கள் ஆடையின் தேர்வில், குறிப்பாக பிரகாசமான மஞ்சள் நிறத்தில் மகிழ்ச்சியடையவில்லை. எனினும், ஒரு சிலர் முதல் பெண்மணி அழகாக இருப்பதாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். இதற்கிடையில் பயனர் ஒருவர், “மன்னிக்கவும், ஆனால் மெலனியாவின் மஞ்சள் உடை எனக்குப் பிடிக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
மற்றொருவர், “இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. பார்க்க நல்ல தோற்றத்தை கொடுக்கவில்லை” எனத் தெரிவித்து இருந்தார். ஆனால் மற்றொருவர், “இதில் என்ன இருக்கிறது. இந்த ஆடை அழகாக இருக்கிறது என நான் நினைக்கிறேன். ஆனால் மஞ்சளுக்கு பதிலாக பச்சை இருந்திருந்தால் இன்னமும் அழகாக இருந்திருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : பிரான்ஸ் அதிபர் மனைவி பெண்ணா, ஆணா? வலுத்த சர்ச்சை.. நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com