Airstrikes Against Yemen’s Houthis: காசா மீதான இஸ்ரேலின் சமீபத்திய முற்றுகைக்கு பதிலளிக்கும் விதமாக, ஏமனில் பயணிக்கும் இஸ்ரேலிய கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கப்போவதாக ஹவுதிகள் அறிவித்தனர்.
Airstrikes Against Yemen’s Houthis: காசா மீதான இஸ்ரேலின் சமீபத்திய முற்றுகைக்கு பதிலளிக்கும் விதமாக, ஏமனில் பயணிக்கும் இஸ்ரேலிய கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கப்போவதாக ஹவுதிகள் அறிவித்தனர்.
Published on: March 16, 2025 at 12:29 pm
ஏமன் நாட்டில் ஹவுதி பிடியில் உள்ள பகுதிகளில் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்க பிரெண்ட் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். முன்னதாக, அமெரிக்க கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த குழுவிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்தார்.
அப்போது டொனால்ட் ட்ரம்ப், உங்கள் நேரம் முடிந்துவிட்டது, உங்கள் தாக்குதல்கள் இன்று முதல் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நீங்கள் இதுவரை கண்டிராதது போல் நரகம் உங்கள் மீது மழை பெய்யும் என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய பி.ஹெச்டி மாணவி.. ரஞ்சனிக்கு நடந்தது என்ன?
அமெரிக்கா தாக்குதல் நடத்துவது ஏன்?
கடந்த தசாப்தத்தில் ஏமனின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹவுத்திகள், நவம்பர் 2023 முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து 100 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
ஹவுதி தாக்குதல்கள் அமெரிக்காவிற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் பில்லியன் கணக்கான டாலர்களை இழக்க செய்துள்ளது. இதற்கிடையில், காசா போர் தொடங்கிய பின்னர் இராணுவ மற்றும் பொதுமக்கள் கப்பல்களை குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
24 பேர் மரணம்
இந்நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து டிரம்ப் புதிய வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார். இதில் 24 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Abu Qatal :ஹபீஸ் சயீத் கூட்டாளி சுட்டுக் கொலை: பாகிஸ்தானில் பரபரப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com