Anura Kumara Dissanayake | இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசாநாயக்க இன்று பொறுப்பேற்றார்.

February 17, 2025
Anura Kumara Dissanayake | இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசாநாயக்க இன்று பொறுப்பேற்றார்.
Published on: September 23, 2024 at 12:52 pm
Anura Kumara Dissanayake | இலங்கையில் 2022ஆம் ஆண்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இடதுசாரி சிந்தனையாயரான அனுரா குமார திசாநாயக்க இன்று அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். 55 வயதான அவர் தனது நெருங்கிய போட்டியாளரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தோற்கடித்து அதிபர் பதவியை கைப்பற்றியுள்ளார்.
இரண்டாவது சுற்று எண்ணிக்கையின் பின்னர் தெளிவான வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சிட்டிங் அதிபரான ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளார். 2019 தேர்தலில் வெறும் 3% வாக்குகளைப் பெற்ற ஒருவருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்பமாக பார்க்கப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட திசாநாயக்க, அவரது ஊழல் எதிர்ப்புத் தளம் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளுக்காக அறியப்படுகிறார்.
முன்னாள் மார்க்சிஸ்ட்
திசாநாயக்க 1968 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி மத்திய இலங்கையில் உள்ள பல கலாச்சார மற்றும் பல மத நகரமான கலேவெலவில் பிறந்தார். மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவராக வளர்ந்த அவர், அரசுப் பள்ளியில் படித்தவர், இயற்பியலில் பட்டம் பெற்றவர், 1987ல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான காலக்கட்டத்தில் ஒரு மாணவராக முதன்முதலில் அரசியலில் நுழைந்தார்
1987 முதல் 1989 வரை, ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி) – ஒரு மார்க்சிஸ்ட் அரசியல் கட்சியுடன் திசாநாயக்கா பின்னர் நெருக்கமாக தொடர்பு கொண்டார். பின்னாள்களில் இவர் ஜனநாயக கட்சியில் பயணிக்க தொடங்கினார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு
21 ஏப்ரல் 2019 அன்று, தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சர்வதேச ஹோட்டல்களில் அடுத்தடுத்து நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் குறைந்தது 290 பேர் கொல்லப்பட்டனர். இது இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான தாக்குதலாக மாறியது. அப்போது, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான முன்னாள் அரசாங்கம் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி மக்கள் மத்தியில் தெரிவிக்கப்படும் என்றார். இலங்கையில் இந்த வாக்குறுதி திசாநாயக்காவுக்கு உந்துதலை கொடுத்தது. இந்த நிலையில், நாடு தழுவிய அதிருப்தியின் பின்னணியில் மாற்றத்திற்கான வேட்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022 இல் பொருளாதார வீழ்ச்சியால் தூண்டப்பட்ட வெகுஜன எதிர்ப்புகளால் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டார். பல ஆண்டுகளாக குறைந்த வரிவிதிப்பு, பலவீனமான ஏற்றுமதிகள் மற்றும் முக்கிய கொள்கை பிழைகள் காரணமாக இலங்கையின் பணவீக்கம் அதிகரித்து காணப்பட்து குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இலங்கை பிரதமர் திடீர் ராஜினாமா: அடுத்த பிரதமர் யார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com