Putin India Visit : இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டையும் பாராட்டினார்.
Putin India Visit : இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டையும் பாராட்டினார்.
Published on: October 3, 2025 at 11:16 am
Updated on: October 3, 2025 at 11:22 am
மாஸ்கோ, அக்.3, 2025: ரஷ்யா உடனான எரிசக்தி வர்த்தகத்தை குறைக்குமாறு தனது வர்த்தக கூட்டாளியான இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்ததற்காக டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை (அக்.2, 2025) கடுமையாக சாடினார்,மேலும் இது வாஷிங்டனுக்கு எதிராகவே தாக்குதலை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
தெற்கு ரஷ்யாவின் கருங்கடல் ரிசார்ட்டான சோச்சியில் இந்தியா உட்பட 140 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் நிபுணர்களின் சர்வதேச வால்டாய் கலந்துரையாடல் மன்றத்தில் விளாடிமிர் புதின் இவ்வாறு பேசியுள்ளார்.
VIDEO | Sochi: Speaking at the international Valdai discussion forum of security and geopolitical experts, Russian President Vladimir Putin said, "Our relations with India are of special nature ever since the soviet Union and since the day India fought for their independence.… pic.twitter.com/5x5KXlIaw3
— Press Trust of India (@PTI_News) October 3, 2025
அப்போது, ரஷ்யாவின் வர்த்தக பங்காளிகள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டால், அது உலகளாவிய எரிசக்தி விலைகளை உயர்த்தும் என்றும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்க கட்டாயப்படுத்தும் என்றும் கூறினார். இது அமெரிக்க பொருளாதாரத்தை மெதுவாக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இந்தியா வருகைமேலும், வரும் டிசம்பரில் இந்தியா வரவுள்ள தனது பயணம் குறித்து விளாடிமிர் புதின் பேசினார். தொடர்ந்து, எரிசக்தி கொள்கை விவகாரத்தில் இந்தியாவையும், பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டையும் அவர் பாராட்டினார்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்.. 12 பேர் மரணம், 100 பேர் காயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com