Bodybuilder Mutant | உலகின் சிறந்த பாடி பில்டர் தனது 36 வயதில் மரணத்தை தழுவினார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Bodybuilder Mutant | உலகின் சிறந்த பாடி பில்டர் தனது 36 வயதில் மரணத்தை தழுவினார்.
Published on: September 13, 2024 at 1:07 pm
Bodybuilder Mutant | இலியா ‘கோலெம்’ யெஃபிம்ச்சிக், உலகின் மிக சிறந்த பாடி பில்டராக அறியப்படுகிறார். இவர் தனது 36வது வயதில் உயிரிழந்தார்.
திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டாக் காரணமாக இலியா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பாடி பில்டர் இலிகா மியூடண்ட் என்றும் அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
நெட்டிசன்கள் அதிர்ச்சி
அவரது மரணம் இணையத்தில் பரவிய உடனேயே, நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி மற்றும் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.
மேலும், தசைகளை கட்டுக்கோப்பாக வைக்க இயற்கைக்கு மாறான வழிகளை முயற்சிப்பது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்றும் சிலர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இலியா ‘கோலெம்’ யெஃபிம்ச்சிக் ஒரு நாளைக்கு ஏழு முறை சாப்பிடுவார். தினமும், 16,500 கலோரிகளை உட்கொண்டார். இதனால் அவர் ஆரோக்கியமானவராக காணப்பட்டார்.
இந்த நிலையில், இந்த பாடி பில்டரின் திடீர் மரணம் சமூக ஊடக தளங்களில் ஒரு உரையாடலைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தானில் மகள் தலையில் சி.சி.டி.வி பொருத்திய தந்தை: என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com