லிதுவேனியாவில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
லிதுவேனியாவில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு விமானம் ஒன்று வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
Published on: November 25, 2024 at 6:37 pm
Lithuania Plane Crash | ஜெர்மனியின் லீப்சிக் நகரில் இருந்து லிதுவேனியா தலைநகர் வில்னியஸ் நோக்கி இன்று அதிகாலை டிஎச்எல் சரக்கு விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. விமானம் விமான நிலையத்தை நெருங்கியபோது தரையிரங்குவதற்கு ஒன்றரை கிலோமீட்டருக்கு முன்பாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் வீடு சேதம் அடைந்தது. இந்த விபத்தில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலைய பகுதியில் உரை பணியுடன் கூடிய வானிலை நிலவியது மேகங்கள் சூழ்ந்து இருந்ததாகவும், மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க உலகை திரும்பிப் பார்க்க வைத்த ஆப்கானிஸ்தான் சிறுமி; யார் இந்த நிலா இப்ராகிம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com