தனது பெயரில் இயங்கும் போலியான ஃபேஸ்புக் ப்ரோபைலில் பதிலளித்து ஏமாற வேண்டாம் என்று ஐஏஎஸ் அதிகாரி ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தனது பெயரில் இயங்கும் போலியான ஃபேஸ்புக் ப்ரோபைலில் பதிலளித்து ஏமாற வேண்டாம் என்று ஐஏஎஸ் அதிகாரி ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Published on: November 25, 2024 at 5:23 pm
Updated on: November 25, 2024 at 5:24 pm
IAS officer warns public of fake FB | அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன், தனது பெயரில் போலியான ஃபேஸ்புக் ப்ரோபைல் இயங்கி வருவதால், மோசடிகளில் சிக்கிக் கொள்ளவோ, அல்லது தம்முடையது எனக் கூறும் செய்திகளுக்கு பதிலளிக்கவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை முடக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் இயக்கும் நபர் ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் மற்றும் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். மற்றும் சிஆர்பிஎஃப் பணியாளர் ஒரு நண்பருக்கு உதவுவதாகக் கூறி அவரைப் பின்தொடர்பவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.
தனது பெயரில் இயங்கும் பேஸ்புக் கணக்கில் சந்தேகத்திற்குரிய செயலை கவனித்த டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன், இதுபோன்ற மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என்று சமூக ஊடகங்களில் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு; தனி இணையதளம் அமைத்திடுக: விஜய் வலியுறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com