Kerala nurse Nimisha Priya: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16 2025 மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமன் அரசு அறிவித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kerala nurse Nimisha Priya: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16 2025 மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமன் அரசு அறிவித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on: July 12, 2025 at 8:40 pm
சனா (ஏமன்) ஜூலை 12 2025: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. 38 வயதான இவர், ஏமன் நாட்டில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வந்தார். இவரின் தொழில்முறை நண்பர் 2017ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் நிமிஷா பிரியா உள்பட மருத்துவ கிளினிக்கில் பணிபுரிந்த சிலர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. தொழில்முறை நண்பர் பாலியல் தொல்லை அளித்த நிலையில் இந்தக் கொலை நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை 2025 ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்ற அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நிமிஷா பிரியா தாக்கல் செய்த மனு, அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் 2023ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.
தியா அளிக்க ஒப்புதல்
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட தொழில்முறை நண்பர் குடும்பத்துக்கு தியா எனப்படும் இரத்த பணம் அளிக்க நர்ஸ் நிமிஷா பிரியா குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர். தியா எனப்படுவது இஸ்லாமிய ஷரியத் சட்டத்துக்குள் வருவது ஆகும். இதில் பாதிக்கப்பட்ட குடும்பம் பணத்தை பெற ஒப்புக் கொண்டால், அப்பெண் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும்.
1 மில்லியன் டாலர்
தற்போது ரூ.1 மில்லியன் அமெரிக்க டாலர் வரை தியா கொடுக்க ஏழை நர்ஸ் குடும்பம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.8.60 கோடி ஆகும். நர்ஸ் நிமிஷா பிரியா உயிரை காப்பாற்ற சர்வதேச அளவிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்; என்ன நடந்தது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com