Netanyahu condemns Pahalgam attack: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கன்டனம் தெரிவித்துள்ளார்.
Netanyahu condemns Pahalgam attack: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கன்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: April 23, 2025 at 8:44 am
Updated on: April 23, 2025 at 8:45 am
ஜெருசலேம், ஏப். 23. 2025: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமான இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
காயமடைந்த 12 சுற்றுலாப் பயணிகள் பஹல்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிடன்ஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
My dear friend @narendramodi,
— Prime Minister of Israel (@IsraeliPM) April 22, 2025
I am deeply saddened by the barbaric terrorist attack in #Pahalgam, Jammu & Kashmir, that killed and injured dozens of innocents.
Our thoughts and prayers are with the victims & their families.
Israel stands with India in its fight against terrorism.
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதலுக்கு கன்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், என் அன்பு நண்பர் நரேந்திர மோடி, ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் பல அப்பாவிகளைக் கொன்று காயப்படுத்திய காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல் எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது..
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக எங்கள் பிராத்தனைகள். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் இஸ்ரேல் துணை நிற்கும். என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: சவுதியில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார் பிரதமர் மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com