Egypt | மலேரியா இல்லாத நாடு என்ற அங்கீகாரத்தை எகிப்துக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி உள்ளது.
Egypt | மலேரியா இல்லாத நாடு என்ற அங்கீகாரத்தை எகிப்துக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி உள்ளது.
Published on: October 21, 2024 at 2:20 pm
Egypt | உலக சுகாதார அமைப்பு (WHO) எகிப்து நாட்டிற்கு மலேரியா இல்லாத நாடு என்று சான்றளித்துள்ளது. இது 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டிற்கு கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க பொது சுகாதார மைல்கல்லாகும்.
பண்டைய காலங்களிலிருந்தே நாட்டில் இருந்த நோயை முடிவுக்குக் கொண்டுவர எகிப்திய அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து சுமார் 100 ஆண்டுகாலமாக செய்துள்ள முயற்சியால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மொராக்கோவைத் தொடர்ந்து கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் மலேரியா இல்லாத நாட்டிற்கான சான்றிதழைப் பெற்ற மூன்றாவது நாடு எகிப்து ஆகும். 2010க்கு பிறகு இந்த சான்றிதழைப் பெற்றுள்ள முதல் நாடு எகிப்து தான். உலக அளவில் மொத்தம் 44 நாடுகளும் 1 பிரதேசமும் இந்த மயில்கல்லை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அனோபிலிஸ் கொசுக்களால் உள்நாட்டில் மலேரியா பரவும் சங்கிலி குறைந்தது முந்தைய மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால் மட்டுமே உலக சுகாதார அமைப்பு (WHO)மலேரியா ஒழிப்புக்கான சான்றிதழ் வழங்குகிறது. மேலும், தொடர்ந்து தடுக்கும் திறனையும் ஒரு நாடு நிரூபிக்க வேண்டும்.
இதையும் படிங்க கடல் போல் மாறிய சகாரா பாலைவனம்; காரணம் வர்ண பகவான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com