Donald Trump: இஸ்ரேல்-ஈரான் இடையே போர் முடிந்து விட்டது; அடுத்த வாரம் அமெரிக்க-ஈரான் ஆகிய நாடுகள் இடையே பேச்சுகள் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Donald Trump: இஸ்ரேல்-ஈரான் இடையே போர் முடிந்து விட்டது; அடுத்த வாரம் அமெரிக்க-ஈரான் ஆகிய நாடுகள் இடையே பேச்சுகள் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Published on: June 25, 2025 at 9:23 pm
நியூயார்க், ஜூன் 25 2025: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய 12 நாள் மோதலால் ஜூன் 13 அன்று தொடங்கிய பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நீடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் போது ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அடுத்த வாரம் ஈரானுடன் நாங்கள் பேசப் போகிறோம். அப்போது, ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். அதுபற்றி எனக்குத் தெரியாது” என்றார்.
மேலும், “இஸ்ரேல்-ஈரான் போர் முடிந்துவிட்டது” என்றார். இஸ்ரேல்-ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த போரில் பலர் கொல்லப்பட்டனர். ஈரான் நாட்டைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கூட பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இஸ்ரேல்- ஈரான் போர் நிறுத்தம்? திடீரென பாய்ந்து வந்த ஏவுகணை.. இஸ்ரேலில் மூவர் பலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com