China | சீனாவில் ஊழல், திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட முன்னாள் பெண் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
China | சீனாவில் ஊழல், திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட முன்னாள் பெண் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Published on: September 21, 2024 at 7:34 pm
Updated on: September 21, 2024 at 7:35 pm
China | சீனாவில், திருமணம் தாண்டிய உறவு மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் பெண் ஆளுநருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சியனான் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான ஜோங் யாங், தனது வசீகரத் தோற்றம் காரணமாக அழகிய ஆளுநர் என ஊடகங்களால் அழைக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இளம் ஆண்களுடன் சல்லாபத்தில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார் என புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், சக ஆண் ஊழியர்கள் 58 பேருடன் திருமணம் தாண்டிய உறவில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை ஜோங் யாங் மறுத்தார். இதற்கிடையில், ஜோங் யாங் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்க தொழிலதிபர்களிடம் இருந்து 70 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சீன நீதிமன்றம் ஜோங் யாங்-க்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் (CCP) சேர்ந்ததன் மூலம் வெறும் 22 வயதில் அரசியலில் நுழைந்த ஜாங், தேசிய மக்கள் காங்கிரஸுக்குள் உயர் பதவிகளை வகித்து விரைவாக உயர்ந்தார்.
“ஓவர் டைம் வேலை” மற்றும் “வணிகப் பயணங்கள்” எனக் கூறி இவர் ஆண் நண்பர்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். பதவியை பயன்படுத்தி ஆண் நண்பர்களை வளைத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் நீதிபதி சுட்டுக் கொலை: நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com