கோவில் உள்ளிட்ட எந்த ஒரு வழிபாட்டு தலங்கள் முன்பும் போராட்டம் செய்ய தடை விதித்து கனடா அரசாங்கம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவில் உள்ளிட்ட எந்த ஒரு வழிபாட்டு தலங்கள் முன்பும் போராட்டம் செய்ய தடை விதித்து கனடா அரசாங்கம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published on: November 15, 2024 at 8:25 am
Canada | கனடா நாட்டின் பிராம்ப்டன் ஹிந்து சபா ஆலயத்தில் நவம்பர் 4-ம் தேதி தாக்குதல் நடைபெற்றது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த பக்தர்களை தாக்கியதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டு தீ போல பரவியது.
இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. கனடா நாட்டின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கனடா ஆதரவு கொடுப்பதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்தனர். மேலும் தொடர்ச்சியாக இதுபோல சம்பவங்கள் நடைபெறும் நிலையில் பிரதமர் ஜஸ்டின் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கிடையில் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜஸ்டின், இந்த விவாகரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதற்கிடையில், பிராம்ப்டன் மேயர் பிரான், ” ஹிந்து கோவில்கள் உட்பட வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் இடங்களில் 100 மீட்டருக்குள் எந்த ஒரு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தக்கூடாது; அவ்வாறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஹிந்து கோவிலுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக சீக்கியருக்கு நீதி வேண்டும் என்ற அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது. ஜஸ்டிஸ் ஃபார் சீக்ஸ் ( சீக்கியர்களுக்கு நீதி வேண்டும்) என்ற அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது; இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com