Iranian missile strikes: இஸ்ரேலின் பீர்ஷெபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Iranian missile strikes: இஸ்ரேலின் பீர்ஷெபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on: June 24, 2025 at 9:29 am
நியூயார்க், ஜூன் 24 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை) இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அறிவித்தார். இருப்பினும், அவரது அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஈரான் அதிபர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய ஆயுதப்படைகளின் இராணுவ நடவடிக்கைகள் அதிகாலை 4 மணிவரை தொடர்ந்தன” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய நேரப்படி அதிகாலை 3.32 மணிக்கு டிரம்ப் வெளியிட்ட பதிவின்படி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் பகுதி பகுதியாக அமலுக்க வரும்” எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில், டிரம்ப் வெளியிட்ட போர் நிறுத்த அறிவிப்புக்கு இஸ்ரேல் இராணுவம் இன்னும் பதிலளிக்கவில்லை என்றாலும், உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குப் பிறகு ஈரானில் இஸ்ரேலிய தாக்குதல்கள் நடந்ததாக எந்த அறிக்கையும் இல்லை என்று ஏபி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : இஸ்ரேல்-ஈரான் போர்.. 20க்கும் மேற்பட்டோர் பலி.. ட்ரம்ப் எச்சரிக்கை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com