பிரான்சில் வன்முறை, தீ வைப்பு.. 1800 பேர் கைது!

France Protest Arrests: பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டங்களால், 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: October 19, 2026 at 1:27 pm

பாரிஸ், அக்.19, 2026: பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பள்ளிகளில் நிலவும் மோசமான சூழலுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதில் காவல்துறையினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதுடன், பல்வேறு கடைகளில் கொள்ளைச் சம்பவங்களும் நடைபெற்றன. இதையடுத்து, நாடு முழுவதும் குறைந்தது 1,800 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டங்களில் முகமூடி அணிந்த சிலர் அரசு கட்டடங்களுக்குத் தீ வைத்ததுடன், நகராட்சி அலுவலகங்களையும் தாக்கினர். மத்திய பிரான்ஸின் லிமோஜஸ் நகரில் உள்ள 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது.

இந்தப் போராட்டங்களில் சுமார் 5.5 லட்சம் பேர் பங்கேற்றதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்முறைச் சம்பவங்களில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஜெண்டர்மேரி படையினர் மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் காயமடைந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரப் பகுதியில் மட்டும் 855 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டார். மேலும், நாட்டு மக்களிடையே உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை தெரிவித்தது. போராட்டங்களின்போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொதுச் சொத்துகள், வணிக நிறுவனங்களுக்கான சேதங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : எலான் மஸ்கின் தாயார் மகனின் கேரேஜில் தங்குகிறார்.. “மெத்தை இருந்தால் போதும்” என நெகிழ்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com