Elon Musk’s Mother Garage Stay: எலான் மஸ்கின் தாயார் மகனின் கேரேஜில் தங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், “மெத்தை இருந்தால் போதும்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Elon Musk’s Mother Garage Stay: எலான் மஸ்கின் தாயார் மகனின் கேரேஜில் தங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், “மெத்தை இருந்தால் போதும்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Published on: October 18, 2026 at 1:16 pm
நியூயார்க், அக்.18, 2026: உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் 78 வயதான தாயார் மேய் மஸ்க், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் விண்வெளி ஏவுதளத்துக்கு மகனைச் சந்திக்கச் செல்லும்போது, அவரது கேரேஜில் தங்குவதாகத் தெரிவித்துள்ளார். படுக்கைக்கு மெத்தையோ அல்லது சோபாவோ இருந்தால் போதும்; தலைக்கு மேல் கூரை இருந்தாலே அது ஒரு வசதிதான் என்று அவர் கூறியுள்ளார்.
நியூயார்க் போஸ்ட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஆடம்பரமான தங்குமிடங்கள் தனக்குத் தேவையில்லை என்று மேய் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். சிறுவயதில் கலஹாரி பாலைவனத்தில் முகாமிட்டு வாழ்ந்த அனுபவம், எளிமையான வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளத் தன்னைப் பழக்கப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கின் வாழ்க்கை முறையும் எளிமையானதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது மகனைச் சந்திக்கச் செல்லும்போது கேரேஜில் படுத்து உறங்குவது தனக்குப் பெரிய சிரமமல்ல என்று கூறும் மேய் மஸ்க், முன்பு தரையிலும் சோபாக்களிலும் உறங்கிய அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
மூன்று குழந்தைகளை வளர்த்த மேய் மஸ்க், ஊட்டச்சத்து நிபுணராகவும் மாடலாகவும் பணியாற்றியுள்ளார். 50 வயதில் நியூயார்க்கில் தனது மாடலிங் வாழ்க்கையைத் தொடர்ந்த அவர், 2022ஆம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்டிரேடட் ஸ்விம்சூட் இதழில் இடம்பெற்றார். தற்போது 78 வயதிலும் மாடலிங் மற்றும் உரை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில், மேய் மஸ்க் எழுதிய “Timeless: The Art of Reinvention and Resilience at Any Age” என்ற சுயசரிதை நூலில், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு முன்னேறிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். வயது அதிகரித்தாலும் ஓய்வுபெறுவது குறித்து யோசிக்கவில்லை என்றும், தனது எழுபதுகள் வாழ்க்கையின் சிறந்த காலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஃபேஸ்புக் கருத்தால் மரண தண்டனை.. இலங்கைத் தமிழரின் தண்டனையை ரத்து செய்த சவுதி நீதிமன்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com