ரிலையன்ஸ் ஜியோவின் இரு திட்டங்கள் குறித்து ஒப்பிட்டு பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் இரு திட்டங்கள் குறித்து ஒப்பிட்டு பார்க்கலாம்.
Published on: November 20, 2024 at 1:45 pm
Jio Recharge | இந்தியாவின் முக்கிய தொலை தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களை 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய சலுகைத் திட்டங்களையும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.
தற்போது 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை வரம்பற்ற அழைப்பு, 4G டேட்டா மற்றும் பல்வேறு ஜியோ சேவைகளுக்கான சந்தாக்களையும் வழங்குகின்றன. ஜியோவின் இந்த திட்டங்கள் ரூ.239 மற்றும் ரூ.249 -க்கு விலையில் உள்ளது.
தற்போது மலிவு விலையில் மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். இருப்பினும், இந்த திட்டங்கள் வெவ்வேறு பயன்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜியோவின் இந்த இரண்டு திட்டங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
ரூ.239 ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. 22 நாட்கள் செல்லுபடியாகும் இத்திட்டத்தில் மொத்தம் 33 ஜிபி டேட்டா கிடைக்கிறது. கூடுதலாக ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சேவைகள்
ரூ. 249 ரீசார்ஜ் திட்டம்
இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், மற்றும் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. 28 நாட்கள் அல்லது நான்கு வாரங்கள் செல்லுபடியாகும் இத்திட்டத்தில் மொத்தம் 28 ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
அதிக டேட்டா விரும்புபவர்களுக்கு ரூ. 239 ரீசார்ஜ் திட்டமும், குறைவான டேட்டா மற்றும் அதிக நாள் சேவையை விரும்புபவர்களுக்கு ரூ. 249 திட்டமும் சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்த இரு திட்டங்களிலும் கூடுதலாக ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் சேவைகள் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க 365 நாளும் பேசலாம்; நாளொன்றுக்கு ரூ.3.50 காசுகள்தான் செலவு: இந்த BSNL ப்ளான் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com