Galaxy Forever: சாம்சங் இந்தியா, குருகிராமில் ஆகஸ்ட் 18, 2026 அன்று கேலக்ஸி ஃபாரவர் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Galaxy Forever: சாம்சங் இந்தியா, குருகிராமில் ஆகஸ்ட் 18, 2026 அன்று கேலக்ஸி ஃபாரவர் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Published on: August 20, 2026 at 11:18 am
குருகிராம், ஆக.20, 2026: சாம்சங் இந்தியா, குருகிராமில் ஆகஸ்ட் 18, 2026 அன்று கேலக்ஸி ஃபாரவர் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கேலக்ஸி இசட் ஃபோல்டு 8 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 8 மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டம், 24 மாதங்கள் வரை ஜீரோ இஎம்ஐ, சாம்சங் கேர் ப்ளஸ் பாதுகாபபு, மேலும் 10வது மாதத்திலிருந்து தொடங்கும். மேலும், பல்வேறு வசதியையும் வழங்குகிறது.
இந்த திட்டம், இளம் வாடிக்கையாளர்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரீமியம் ஃபோல்டபிள் போன்களை உடனே பயன்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கு, எதிர்காலத்தில் அப்கிரேட் செய்யும் போது மதிப்பு குறையாமல் இருக்கும் என்ற நம்பிக்கையை கேலக்ஸி ஃபாரவர் தருகிறது. சந்தையில் கிடைக்கும் ரீ-சேல் விலையை மட்டுமே நம்பாமல், நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்ட buyback மதிப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
மேலும், கேலக்ஸி ஃபாரவர் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மூன்று:
கேலக்ஸி Z ஃபோல்டு8 அல்ட்ரா மாதம் ரூ.9417-க்கு கேலக்ஸி ஃபாரவர் திட்டத்துடன் கிடைக்கிறது. இதில் ரூ.8334 EMI மற்றும் ரூ.1083 திட்டக் கட்டணம் அடங்கும். தொடர்ந்து, கேலக்ஸி Z ஃபோல்டு 8 மாதம் ரூ.8584-க்கு கிடைக்கிறது; இதில் ரூ.7500 EMI மற்றும் ரூ.1084 திட்டக் கட்டணம் அடங்கும்.
வாடிக்கையாளர்கள் 10-11வது மாதத்தில் 55%, 12-13வது மாதத்தில் 50%, 14-18வது மாதத்தில் 45%, 19-25வது மாதத்தில் 40% buyback மதிப்பைப் பெறலாம். இந்த திட்டம், பாரம்பரிய முறையில் போன் வாங்குவதை மாற்றுவதற்காக அல்ல; அதனை மேலும் சிறப்பாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
முழு விலையை செலுத்தி போன் வாங்கும் வழியும் தொடர்கிறது. ஆனால் கேலக்ஸி ஃபாரவர் மூலம், நிதி வசதி, பாதுகாப்பு, நிரந்தர திரும்ப பெறுதல் மதிப்பு ஆகியவை ஒரே உரிமையாளர் திட்டத்தின் கீழ் கிடைக்கின்றன.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி ஃபோல்டபிள் தொழில்நுட்பத்தை இன்று பயன்படுத்தி, எதிர்கால அப்கிரேடுக்கு தெளிவான பாதையைப் பெற முடிகிறது.
இதையும் படிங்க : ரயில் டிக்கெட் முன்பதிவு.. Uber புதிய சேவை தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com