BSNL Recharge | 2024 ஜூலை மாதத்தில் பி.எஸ்.என்.எல். ஒரே மாதத்தில் 2.9 (29 லட்சம்) மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது
BSNL Recharge | 2024 ஜூலை மாதத்தில் பி.எஸ்.என்.எல். ஒரே மாதத்தில் 2.9 (29 லட்சம்) மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது
Published on: September 21, 2024 at 7:15 pm
BSNL Recharge | பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில் பி.எஸ்.என்.எல் புதிதாக 2.9 மில்லியன் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. அதேநேரத்தில், சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ ஜூலை மாதத்தில் 758,000 சந்தாதாரர்களை இழந்தது. மேலும், வோடபோன் ஐடியா 1.4 மில்லியனை இழந்தது.
தொடர்ந்து, ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க்கில் இருந்து வெளியேறியதால் பார்தி ஏர்டெல் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதனை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தரவுகள் காட்டுகின்றன. ஜூலை நிலவரப்படி, ஜியோ 475.7 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
அடுத்த இடத்தில் உள்ள ஏர்டெல் 387.3 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தொடர்ந்து வோடபோன் ஐடியா 215.8 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் 3வது இடத்தில் உள்ளது. பிஎஸ்என்எல் 88.5 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த மொபைல் போன் பயனர்கள் ஜூன் மாதத்தில் 1.17 பில்லியனில் இருந்து ஜூலையில் 1.16 பில்லியனாக குறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 28 நாள் வேலிடிட்டி; ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: எந்தத் திட்டம் பெஸ்ட்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com