சிம் மாற்றினால் யூ.பி.ஐ 24 மணி நேரம் வேலை செய்வதில்லை ஏன்?

OTP Delay Explained : சிம் மாற்றினால் யூ.பி.ஐ 24 மணி நேரம் செயல்படுவதில்லை. அது ஏன் தெரியுமா?

Published on: May 26, 2026 at 12:07 pm

புதுடெல்லி, மே 26, 2026: சிம் மாற்றம் அல்லது மின்னணு சிம் மாற்றத்திற்குப் பிறகு 24 மணி நேரம் யூ.பி.ஐ, ஒ.டி.பி, மற்றும் வங்கி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவது பாதுகாப்பு காரணமாகும். இது மோசடி தடுப்பு நடவடிக்கையாக ட்ராய் விதிமுறைகளின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ளது.

எஸ்.எம்.எஸ் சேவைகள் ஏன் நிறுத்தப்படுகின்றன?

ட்ராய் விதிமுறைகளின்படி, சிம் மாற்றம், சிம் ஸ்வாப், அல்லது இ-சிம் மாற்றம் நடந்தால் 24 மணி நேரம் எஸ்.எம்.எஸ் குறுஞ்செய்தி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும். இந்த 24 மணி நேர இடைவெளி, பாதுகாப்பு வசதிக்காக செயல்படுகிறது.

யூ.பி.ஐ மற்றும் வங்கி சேவைகளின் தாக்கம்

இதனால் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யூ.பி.ஐ ஆப்கள் எஸ்.எம்.எஸ் அடிப்படையிலானவற்றை பயன்படுத்துவதால் 24 மணி நேரம் செயலிழக்கின்றன. மேலும், வங்கி ஓ.டி.பி-கள், கார்டு பரிவர்த்தனைகள், நிதி பரிமாற்றங்கள் அனைத்தும் பாதிக்கப்படும். எஸ்.எம்.எஸ் அலெர்ட்கள் (டெபாசிட்/வித்ராவல்) கூட அந்த காலத்தில் கிடைக்காது. எனினும், சில வங்கிகள் இமெயில் ஒ.டி.பி அல்லது டோக்கன் மூலம் குறைந்த அளவு சேவைகளை வழங்கலாம்.

பயனர்களுக்கான பரிந்துரைகள்

அவசர வங்கி பரிவர்த்தனைகள் இருக்கும் போது சிம் மாற்றம் அல்லது இசிம் மாற்றம் தவிர்க்கவும். மாற்றம் அவசியமானால், 24 மணி நேரம் காத்திருந்து யூ.பி.ஐ பதிவு அல்லது பெரிய பரிவர்த்தனைகள் செய்யவும்.

இதையும் படிங்க : நிலவில் டீ குடிக்கலாம்.. செவ்வாயில் தோசை சாப்பிடலாம்.. சாதித்த ஸ்பேஸ்எக்ஸ்!

100 ஆண்டுகளுக்கு முன்பு நீராவி கப்பல் விபத்து.. தீவில் குடியேறிய எலிகள்.. கூண்டோடு அழிந்த 5 இனங்கள்.. அதிர்ச்சி தகவல்!
Black rats

100 ஆண்டுகளுக்கு முன்பு நீராவி கப்பல் விபத்து.. தீவில் குடியேறிய எலிகள்.. கூண்டோடு அழிந்த 5 இனங்கள்.. அதிர்ச்சி தகவல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com