சாத்தான்குளத்தில் பரபரப்பு.. கிராம நிர்வாக அதிகாரி குழந்தையை வீடு புகுந்து கடத்த முயற்சி?

Sathankulam : கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்த முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Published on: April 28, 2026 at 2:26 pm

தூத்துக்குடி, ஏப்.28, 2026: கிராம நிர்வாக அதிகாரி வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்த முயன்றதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்; அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஓடக்கரை தெருவைச் சேர்ந்த சுபாஷ், அரசூர் 1 கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இவர் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தபோது, சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தார்.

தொடர்ந்து, அவர், சுபாஷின் மனைவியின் கழுத்தை நெரித்து நகையை பறிக்க முயன்றார். மனைவி அலறிய சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்தனர். உடனே அந்த பெண், சுபாஷின் மூன்று வயது மகளை தூக்கிக் கொண்டு ஓட முயன்றார். ஆனால் சுபாஷ் மற்றும் உறவினர்கள் அந்தப் பெண்ணை பிடித்து குழந்தையை மீட்டனர்.

அந்த பெண் அவர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். பின்னர் வர்த்தக சங்கத்தினர் அந்தப் பெண்ணை பிடித்து சாத்தான்குளம் போலீசில் ஒப்படைத்தனர். புகார் அளித்தும் போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் திரண்டனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில், அந்தப் பெண் தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பதும், மேல சாத்தான்குளம் பகுதியில் உள்ள வீட்டில் ஒரு மாதமாக வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், சம்பவம் நடந்தபோது அவர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, போலீசார் அவர்மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க : சென்னையில் பட்ட பகலில் பயங்கரம்.. தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com