திருப்பத்தூரில் போலி மருத்துவர்கள் இருவர் கைது.. பரபரப்பு

Fake doctors arrested: திருப்பத்தூரில் போலி மருத்துவர்கள் இருவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Published on: June 14, 2026 at 2:46 pm

திருப்பத்தூர், ஜூன் 14, 2026: திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் இருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். கொட்டாவூர், பேராம்பட்டு கிராமங்களில் மருத்துவ படிப்பை முறையாகப் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், இளங்கோ (68) என்பவர் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு மட்டும் முடித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. அவரது கிளினிக்கில் ஆங்கில மருந்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. அதேபோல், பேராம்பட்டு பகுதியில் சந்தோஷ் என்பவரும் மருத்துவ தகுதி இல்லாமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது வெளிச்சம் பார்த்தது.

இருவரும் மருத்துவ தகுதி இல்லாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது உறுதியானதால், அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். மருத்துவ துறையில் போலி மருத்துவர்கள் செயல்படுவது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தானது என்பதால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், கிராமப்புறங்களில் மருத்துவ தகுதி இல்லாதவர்கள் மருத்துவம் பார்த்து வருவதை வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : போலீசுக்கே பாலியல் தொல்லை.. மூன்று பேரை தட்டித் தூக்கிய போலீஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com