Karur Stampede case : மாநில அரசின் விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை என த.வெ.க. உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளத. மேலும், உண்மை வெளிவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
Karur Stampede case : மாநில அரசின் விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை என த.வெ.க. உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளத. மேலும், உண்மை வெளிவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
Published on: October 10, 2025 at 4:16 pm
புதுடெல்லி, அக்.10, 2025: நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்தக் கட்சியின் கூட்டம் கரூரில் செப்.27ஆம் தேதி நடந்தது. அப்போது, கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர்.
இது தொடர்பான வழக்கு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (அக்.10, 2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “கூட்ட நெரிசல் நடந்த போது விஜய் தப்பியோடினார் என அரசு வழக்கறிஞர் கூறினார். இதற்கு த.வெ.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் விஜய் அங்கிருந்து சென்றார் எனக் கூறப்பட்டது. மேலும், அப்பகுதியில் விஜய் இருப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும் எனவும் அதிகாரிகள் கூறினார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது. மேலும், விஜய் மற்றும் கட்சியை எதிர்மனுதாரராக சேர்க்காமல் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு
மேலும், தமிழக அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து த.வெ.க சார்பில் வழக்கறிஞர், “நாங்கள் வளர்ந்துவரும் கட்சி. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். மாநில அரசின் விசாரணை குழுவின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
அஸ்ரா கார்க் தலைமை..
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அஸ்ரா கார்க் சி.பி.ஐ.யில் பணியாற்றியுள்ளார். அவர் நியாயமான அதிகாரி. அவர் தலைமையில்தான் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க : கரூர் செல்கிறார் விஜய்? டி.ஜி.பி.யிடம் அனுமதி கோரிய த.வெ.க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com