TTV Dhinakaran | அடியோடு சீர்குலைந்து இருக்கும் சுகாதாரத் துறையை மீட்பது எப்போது என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
TTV Dhinakaran | அடியோடு சீர்குலைந்து இருக்கும் சுகாதாரத் துறையை மீட்பது எப்போது என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on: November 13, 2024 at 8:26 pm
TTV Dhinakaran | அடியோடு சீர்குலைந்து இருக்கும் சுகாதாரத் துறையை மீட்பது எப்போது என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் மீது கத்திக்குத்து – கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை – அடியோடு சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையை சீரமைப்பது எப்போது ?
சென்னை கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் திரு.பாலாஜி அவர்கள் மீது நடைபெற்றிருக்கும் கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் சீர்குலைந்திருக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அதேபோல, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை வழங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தால், மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரையே தாக்கும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
எனவே, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அனைத்து மருத்துவமனைகளிலும் முறையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, மக்களின் உயிரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க சர்வே பணியில் மாணவிகள்; விஷ ஜந்துகள் கடித்து மருத்துவமனையில் அனுமதி: டிடிவி கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com