TTV Dhinakaran | வேளாண் மாணவிகளை கட்டாயப்படுத்தி சர்வே பணிகளில் ஈடுபடுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன.
TTV Dhinakaran | வேளாண் மாணவிகளை கட்டாயப்படுத்தி சர்வே பணிகளில் ஈடுபடுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன.
Published on: November 13, 2024 at 12:21 pm
TTV Dhinakaran | விஷ ஜந்துகள் கடித்ததில் கல்லூரி மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் எடுத்துள்ள அறிக்கையில்,”விஷ ஜந்துகள் கடித்ததில் விளை நிலங்கள் டிஜிட்டல் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி – முன் அனுபவமில்லாத கல்லூரி மாணவ, மாணவியர்களை சர்வே பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தமிழக அரசின் விளை நிலங்கள் டிஜிட்டல் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் விஷ ஜந்துகள் கடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
வேளாண்மைக்கான நிலம் மற்றும் சாகுபடி பயிர் குறித்த முழுமையான விவரங்களை சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் சர்வே பணிகளில் வருவாய் துறையினரை ஈடுபடுத்தாமல், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தி அவர்களின் உயிர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய தமிழக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
டிஜிட்டல் சர்வே பணிகளுக்கு தேவையான பெரும்பாலான நிதியை மத்திய அரசு ஒதுக்கும் சூழலில், அண்டை மாநிலங்கள் அந்தந்த மாநில அரசு அதிகாரிகளை பயன்படுத்தியும், பயிற்சி பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் சர்வே பணிகளை செய்து வருவதாக அறியவரும் நிலையில், தமிழக அரசு மட்டுமே அரசு அதிகாரிகளை தவிர்த்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை கட்டாயப்படுத்தி சர்வே பணிகளில் ஈடுபட வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, விஷ ஜந்துகள் கடித்ததில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவிக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு வருவாய்த்துறை மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டிய சர்வே பணிகளில் முன் அனுபவம் இல்லாத வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சென்னை சிறுமி வன்கொடுமை- காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்: ஆளுங்கட்சியினரை காப்பதுதான் பணியா?அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com