TTV Dhinakaran | அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றவர்களில் 5 பேர் உயிரிழப்பு – குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் லட்சக்கணக்கான பொதுமக்களை இன்னல்களுக்குள்ளாக்கிய தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற பார்வையாளர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன.
விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளையோ, நிகழ்ச்சி நிறைவடைந்து திரும்பிச் செல்வதற்கான போதிய போக்குவரத்து வசதிகளையோ செய்து தராத தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே 5 பேரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்திற்கும் பவளவிழா மாநாட்டை நடத்துவதற்கும் அதீத கவனம் செலுத்தி முன்னேற்பாடுகளை முடுக்கிவிடும் திமுக அரசு, லட்சக்கணக்கானோர் கூடிய மெரினா கடற்கரையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது மக்கள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, நீர்ச்சத்து குறைபாடு, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீர்ரகள் பலி.. பாக்-ஆப்கன் இடையே போர் நிறுத்தம் உடனடி அமல்!
Pakistan Afghanistan ceasefire : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ‘உடனடி போர்நிறுத்தத்திற்கு’ ஒப்புக்கொண்டன என கத்தார் தெரிவித்துள்ளது.
- மிதுன ராசிக்கு ஆன்மிகம்; 12 ராசிகளின் இன்றைய (அக்.19, 2025) பலன்கள்!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (அக்.19, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
- ஆபரேஷன் சிந்தூர் ட்ரெய்லர்தான்; ராஜ்நாத் சிங்
Rajnath singh: “பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸ் எல்லைக்குள் இருக்கின்றன; ஆபரேஷன் சிந்தூர் ட்ரெய்லர்தான்” என எச்சரித்துள்ளார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
- பிரதீப் ரங்கநாதனின், ‘டியூட்’ படம் எப்படி இருக்கு? 2ஆம் நாள் வசூல் என்ன?
Dude box office collection: நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் 2ஆம் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
- பீகார் சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு.. போஜ்புரி நடிகை வேட்புமனு தள்ளுபடி!
Seema Singhs nomination Rejected: பீகாரில் பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பெயர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் போஜ்புரி நடிகை ஆவார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்