Karur stampede death: கரூர் கூட்டநெரிசல் மரணம் தொடர்பாக நடிகர் விஜய் கைது செய்யப்படலாம் என உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதற்குப் பதிலளித்துள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
Karur stampede death: கரூர் கூட்டநெரிசல் மரணம் தொடர்பாக நடிகர் விஜய் கைது செய்யப்படலாம் என உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதற்குப் பதிலளித்துள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
Published on: September 28, 2025 at 11:36 pm
கரூர், செப்.28, 2025: கரூரில், சனிக்கிழமை (செப்.27, 2025) விஜய் தேர்தல் பரப்புரையில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 40 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர். இதில் குழந்தைகள் உள்பட பெண்களும் அடங்கும். இந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தங்களின் உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்த விஷயத்தில் அரசியல் பேச விரும்பவில்லை” என்றார். மேலும், சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து விசாரணை ஆணையத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கிடையில், நடிகர் விஜய் கைது செய்யப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவின. மேலும், தெலங்கானாவில் கூட்ட நெரிசல் மரண விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதுபோல் நடிகர் விஜய்யும் கைது செய்யப்பட வேண்டும் என சிலர் சமூக வலைதளத்தில் எழுதியும் வருகின்றனர்.
இதையும் படிங்க : ‘கண்கள் கலங்கி தவிக்கிறேன்’.. ரூ.20 லட்சம் இழப்பீடு.. த.வெ.க விஜய் அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com