Vanathi Srinivasan | கைவினைக்கலைஞர்களை மேம்படுத்த தமிழக அரசு விஸ்வகர்மா திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் G.K. நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசு கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஊக்குவிக்க ரூ.13,500 கோடியில் விஸ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தச்சர்,பொற்கொல்லர் உள்ளிட்ட 18 வகையான கைத்தொழில் புரிவோர் ரூ.1 இலட்சம் வரை குறைந்த வட்டியில் பிணையில்லாக் கடன் பெற முடியும்.
தமிழ்நாட்டில் மட்டும் 4 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் தங்களைப் பதிவுசெய்து வங்கியில் பணம் வருவதற்காக காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் தமிழக அரசோ இது குலத்தொழில் திட்டம் என்றுகூறி திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.
பல மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதிகளவில் பெண்கள் பயன்பெற்று வரும் வேளையில் தமிழகத்தில் இத்திட்டத்தை புறக்கணிப்பது திமுக அரசு தமிழக மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
இதுகுறித்து கோவை ராஜவீதி மீட்டிங் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் இத்திட்டத்தின் பயன்குறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் தமிழக பொறுப்பாளர் G.K.நாகராஜ் கலந்து கொண்டு இத்திட்டம் குறித்து விரிவாக விளக்கினார்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் இத்திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த காலதாமதப்படுத்தினால், புறக்கணித்தால் அடுத்தகட்டமாக கோவையில் கைவினைக்கலைஞர்களை ஒன்றுதிரட்டி விரைவில் மாபெரும் பட்டினிப்போராட்டத்தை நடத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
Khushbu: 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகை குஷ்பு பதிலளித்தார்….
Piyush Goyal Chennai visit: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்; அ.தி.மு.க.விடம் எத்தனை தொகுதிகள் கேட்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் எனத்…
Annamalai: ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்….
Bomb threat to M K Stalins house : சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடு மற்றும் பா.ஜ.க அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்…
Nainar Nagendran: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஹெல்மெட் வழங்கினார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்