Tirunelveli: ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் வெளியிட்டதால் மிரட்டல்கள் வருகின்றன என சமூக ஊடகத்தில் வஹீதா அக்தர் என்பவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
Tirunelveli: ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் வெளியிட்டதால் மிரட்டல்கள் வருகின்றன என சமூக ஊடகத்தில் வஹீதா அக்தர் என்பவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Published on: January 14, 2026 at 11:58 am
Updated on: January 14, 2026 at 12:01 pm
திருநெல்வேலி, ஜன.14, 2026: சமூக ஊடகப் பிரபலமான வஹீதா அக்தர், ஹிஜாப் அணிந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்டதற்காக தன்னை மிரட்டியதும், மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஆன்லைனில் அவர் பகிர்ந்த காணொலி வீடியோ அறிக்கைகளில், “என் சொந்த சமூகத்திலிருந்தே சிலர் என்னை குறிவைத்து, என் சொந்த ஊரான தமிழ்நாடு கடையனல்லூரை அவமதிக்கிறேன் என்று குற்றம்சாட்டினர். சிலர் என் வீட்டிற்கே வந்து, என்னையும் என் தாயையும் மனரீதியாக தொந்தரவு செய்தனர்” என வஹீதா கூறினார்.
இதையும் படிங்க: திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. மூவர் கைது!
“இதைப் பற்றி பேச விரும்பவில்லை. ஆனால், ஆன்லைன் தளங்களைத் தாண்டி என் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் இந்த தொல்லை நுழைந்ததால் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடையநல்லூரின் பெயருக்கு சேதம் விளைவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை எதிர்த்து, வஹீதா, “அந்த ஊரில் பாலியல் வன்கொடுமை, குழந்தை துஷ்பிரயோகம், கட்டாய திருமணம், இளம் வயது கர்ப்பம் போன்ற பல சமூகச் சிக்கல்கள் நடந்துள்ளன.
அவை ஊரின் பெயருக்கு சேதம் என யாரும் கூறவில்லை. ஆனால் என் ரீல்ஸ் மட்டும் குறிவைக்கப்படுகிறது” என வினவியுள்ளார். மேலும் அதில், “நான் புர்கா அல்லது ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் செய்கிறேன். வேறு எதையும் செய்யவில்லை. என் உள்ளடக்கம் இஸ்லாமை அல்லது மத நம்பிக்கையை அவமதிப்பதில்லை. அல்லாஹ்வைப் பற்றி தவறாக பேசவில்லை. நான் விரும்பியதை செய்கிறேன்” எனவும் வஹீதா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com