திருநெல்வேலி மாவட்ட டி.எஸ்.பி பா. மூர்த்தி, ஓரினச் சேர்க்கை டேட்டிங் செயலிகள் குறித்து எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
திருநெல்வேலி மாவட்ட டி.எஸ்.பி பா. மூர்த்தி, ஓரினச் சேர்க்கை டேட்டிங் செயலிகள் குறித்து எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
Published on: September 1, 2024 at 12:09 am
Tirunelveli | தனிமையில் சந்திக்க தூண்டும் டேட்டிங் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இன்னமும் உள்ளன. கவனமாக இருக்கும்படி நெல்லை டி.எஸ்.பி பா. மூர்த்தி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
“ கூகு்ள ப்ளேஸ்டோரில் Grindr (Gay Dating & Chat) போன்ற ஓரினச்சேர்க்கை செயலிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இளம் வயதினருக்கு குறி..
இந்தச் செயலியில், முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபர்கள் பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இச்செயலியினால், முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு அதன் மூலம் பழக்கம் ஏற்பட்டு, ஆசை வார்த்தைகளைக் கூறி தனிமையில் சந்திக்கத் தூண்டி அதன் மூலம் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வழிப்பறி செய்து வருகின்றனர்.
இதுவரை 70 பேர் கைது
இது சம்மந்தமாக கிடைக்கப்பெறும் புகார் மனுக்களின்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி சரகத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், இந்த ஆண்டில் மட்டும் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட 70 எதிரிகள் கைது செய்யபட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை
மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள்மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களும் இது போன்ற குற்ற செயல்புரியும் எண்ணத்தோடு சமூக வலைதளங்கள், பிற தகவல் ஊடகங்கள் ஆகியவற்றில் தங்களை அணுகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும், இதுபோன்ற ஏமாற்று செயலின் மூலம் பாதிக்கப்படாமல் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
Grindr App மற்றும் அதைப்போன்ற வேறு செயலிகளை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
புகார் எண் அறிவிப்பு
மேலும், இதுபோன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையையோ, அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையையோ தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பணகுடி, ராதாபுரம் காவலர்களுக்கு பாராட்டு: நற்சான்றிதழ் வழங்கிய டி.எஸ்.பி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com