Tirunelveli: சமூகரெங்கபுரத்தில் உள்ள அற்புதம் சாமுவேல் பப்ளிக் பள்ளியில் பள்ளி நிறுவனர் எஸ். சந்தனமுத்து சிலை இன்று (பிப்.22, 2025) திறக்கப்பட்டது.
Tirunelveli: சமூகரெங்கபுரத்தில் உள்ள அற்புதம் சாமுவேல் பப்ளிக் பள்ளியில் பள்ளி நிறுவனர் எஸ். சந்தனமுத்து சிலை இன்று (பிப்.22, 2025) திறக்கப்பட்டது.
Published on: February 22, 2025 at 3:05 pm
Updated on: February 22, 2025 at 4:15 pm
நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள அற்புதம் சாமுவேல் பப்ளிக் பள்ளியில் பள்ளி நிறுவனர் எஸ். சந்தனமுத்து சிலை திறப்பு விழா நடைபெற்றது. அப்போது, அவரது பெயரிலான ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு விழாவும் இன்று (பிப்.22, 2025) நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு சட்டசபை தலைவர் மு. அப்பாவு கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில், நாகர்கோவில் கிறிஸ்தவ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் என்.பிரைட் செல்வகுமார் மற்றும் வேளாங்கண்ணி பள்ளிகள் குழும தாளாளர் எஸ்.ஞானசிகாமணி ஆகியோர் ஸ்கேட்டிங் மைதானத்தை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் பள்ளி நிர்வாகிகள் எஸ்.செல்வின், எஸ்.தேவராஜ், எஸ்.ஜான்சன், எஸ்.மேரி மற்றும் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க
கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை; எந்தெந்த தினங்கள் தெரியுமா?
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்? காளியம்மாளை சுற்றும் வதந்தி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com