நாட்டிலேயே அரசு மருத்துவமனை பயன்பாடு.. தமிழ்நாடு முதலிடம்!

Government Hospital Utilization: இந்திய மாநிலங்களிலே அதிகளவில் அரசு மருத்துவமனை பயன்பாட்டில் தமிழ்நாடு 43 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

Published on: April 28, 2026 at 9:55 am

சென்னை, ஏப்.28, 2026: இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தேசிய புள்ளியியல் ஆய்வகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, தமிழகத்தில் 43 சதவீதம் பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளைத் தேர்வு செய்கிறார்கள்.

மேலும், அறிக்கையில், தரமான மருத்துவ சேவைகள், நவீன வசதிகள், மற்றும் அரசு மருத்துவர்களின் மீது மக்களிடம் நிலைத்துள்ள நம்பிக்கை ஆகியவை இந்த சாதனைக்கு முக்கிய காரணமாகும். தமிழக அரசு மருத்துவமனைகள், பொதுமக்களுக்கு குறைந்த செலவில், உயர்தர சிகிச்சையை வழங்குவதால் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

இதையும் படிங்க :தூத்துக்குடியில் ஹோலோசீன் கால புதைபடிவப் படுகை கண்டுபிடிப்பு

கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை அரசு மருத்துவமனைகள் பரவலாக செயல்படுவதும், அவசர சிகிச்சை மற்றும் சிறப்பு மருத்துவ சேவைகள் எளிதில் கிடைப்பதும், மக்களை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தூண்டுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை, தமிழகத்தின் சுகாதாரத் துறையில் முன்னேற்றத்தையும், மக்கள் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான சிகிச்சை வழங்கும் முயற்சியில், தமிழக அரசு மருத்துவமனைகள் இந்தியாவிலேயே முன்னிலை வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தி.மு.க தொண்டர் காதறுப்பு.. விழுப்புரத்தில் பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com