Holocene Fossil Bed Discovered : தூத்துக்குடியில் ஹோலோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிவப் படுகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Holocene Fossil Bed Discovered : தூத்துக்குடியில் ஹோலோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிவப் படுகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Published on: April 27, 2026 at 7:19 pm
Updated on: April 27, 2026 at 7:20 pm
தூத்துக்குடி, ஏப். 27 2026: தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஹோலோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிவப் படுகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தக் கண்டுபிடிப்பு நாட்டின் குவாட்டர்னரி புதைபடிவப் பதிவேட்டை குறிப்பிடத்தக்க அளவில் வளப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த யாதவ், இது இந்தியாவின் பண்டைய வனவிலங்குகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையை சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவும் என்று கூறினார்.
At the request of the Thoothukudi administration in Tamil Nadu, @ZoologicalI conducted a field survey of fossil sites exposed by torrential rains in 2023.
— Bhupender Yadav (@byadavbjp) April 27, 2026
The assessment confirms a newly discovered Fossil Bed dating back to the Holocene period (8,000–12,000 years), which… pic.twitter.com/TlYi4UuRSC
2023-ஆம் ஆண்டில் பெய்த கனமழையால் இந்தப் புதைபடிவத் தளங்கள் வெளிப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரில், இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் (Zoological Survey of India) தள ஆய்வை மேற்கொண்டது.
இதையும் படிங்க : தி.மு.க தொண்டர் காதறுப்பு.. விழுப்புரத்தில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com