M K Stalin pays tribute to actor Rajesh: மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
M K Stalin pays tribute to actor Rajesh: மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
Published on: May 29, 2025 at 2:18 pm
சென்னை, மே 29 2025: பழம்பெரும் நடிகர் ராஜேஷ் இன்று (மே 29 2025) மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவரின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
மறைந்த இயக்குனர் சிகரம் கே பாலசந்தரால் அவள் ஒரு தொடர்கதை படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் ராஜேஷ் தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ராஜேஷிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜேஷ் தனது மகன் மற்றும் மகளுடன் சென்னையில் வசித்து வந்தார். 75 வயதான நிலையில் இன்று அவர் திடீரென மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நடிகர் ராஜேஷ் காலமானார்.. ரஜினிகாந்த் இரங்கல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com