S. P. Velumani | ஜெயலலிதா மரணம் குறித்து எஸ்.பி. வேலுமணி உருக்கமாக பேசியுள்ளார்.
S. P. Velumani | ஜெயலலிதா மரணம் குறித்து எஸ்.பி. வேலுமணி உருக்கமாக பேசியுள்ளார்.
Published on: October 29, 2024 at 7:37 pm
S. P. Velumani | செம்மஞ்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், அதிமுக ஆட்சியில் காவல் துறையினர் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆனால், தற்போது அவ்வாறு இல்லை. இதனால், காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதனால், சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது.
அதிமுக வினர் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள் மீது வழக்கு பதியப்படுகிறது. கடந்த வாரம், தூத்துக்குடிக்கு சென்றிருந்தேன். என் மீதும் கடமபூர் ராஜூ மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் கவலைபடப் போவதில்லை. 2026 தேர்தலில் அதிமுக தான் ஆட்சி அமைக்கும்.
2011 ஐ தொடந்து 2016 ல் தொடர் ஆட்சியை கொண்டு வந்தார் ஜெயலலிதா. தனது உயிரைப் பற்றி கவலை படாமல் தொடர்ந்து உழைத்தார். எங்களையெல்லாம் எம்.எல்.ஏ. ஆக்கி அழகு பார்த்தார். அந்த சமயங்களில் மட்டும் ஜெயலலிதா அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றிருந்தால் தற்போது உயிரோடு இருந்திருப்பார்.
கட்சி மற்றும் ஆட்சியின் நலனை மட்டும் கருத்தில்கொண்டு அவர் செயல்பட்டதால்தான் அமெரிக்கா செல்லவில்லை. ஆட்சியும் கட்சியும் நல்லா 100 ஆண்டுகள் நல்லா இருக்கனும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசினார். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க திமுக, பாஜக மறைமுக கூட்டணி; அதிமுக, த.வெ.க கூட்டணி ஏற்படுமா? எடப்பாடி பழனிச்சாமி பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com