Trichy to Tambaram special trains: திருச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Trichy to Tambaram special trains: திருச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Published on: March 12, 2025 at 9:48 am
தமிழ்நாட்டின் இதய பகுதியான திருச்சியில் இருந்து தலைநகர் சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் திருச்சி டு தாம்பரம் வரை இயக்கப்படும் என தென்னக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கல்வி நிலையங்களில் கோடை விடுமுறை அளிக்கப்படும். இந்தக் காலகட்டங்களில், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்தக் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு கோரிக்கைகள் தென்னக ரயில்வேக்கு விடுக்கப்பட்டன.
இந்த நிலையில் திருச்சி டு சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் 2025 ஏப்ரல் நான்காம் தேதி தனது பயணத்தை தொடங்குகிறது.
மேலும் அதே மாதம் 27ஆம் தேதி வரை வாரத்தின் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு ரயில் முன்பதிவு எப்போது?
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 2025 மார்ச் மாதம் 12ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. இந்த ரயில்களில் சிறப்பம்சம் என்னவென்றால் இவைகள், அதிவேக ரயில்களாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, திருச்சி டு சென்னை தாம்பரம் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: ₹2000 கோடி அல்ல ₹10,000 கோடி தந்தாலும்.. மீண்டும் உறுதிப்படுத்திய மு.க ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com