Seeman | இரண்டை விடுங்கள்; நான்கு வரியை நீக்கியது யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள சீமான் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் தாய் வாழ்த்து பாடலையே தூக்குவேன் என கூறியுள்ளார்.
Seeman | இரண்டை விடுங்கள்; நான்கு வரியை நீக்கியது யார்? எனக் கேள்வி எழுப்பியுள்ள சீமான் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் தாய் வாழ்த்து பாடலையே தூக்குவேன் என கூறியுள்ளார்.
Published on: October 20, 2024 at 2:08 pm
Seeman | நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்துப் பாடலை தூக்குவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஈழத் தமிழர்களை கொன்று குவித்தபோது வராத கோபம், தமிழ் மொழியை கொன்று குவித்த போது வராத கோபம் இரண்டு வரியை தூக்கியதற்கு வருகிறதா? என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தில் ஆரியம் வழக்கொழிந்து உள்ளிட்ட வார்த்தைகளை தூக்கியது யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு எடுக்கப்படும். அப்போது என்ன செய்வார்கள். திராவிடம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை தருவார்களா? 3 தலைமுறையாக தமிழ் எழுத படிக்க முடியாத தலைமுறையை உருவாக்கியதை தவிர, தெருவிற்கு இரண்டு மதுபானக் கடைகளை திறந்ததை தவிர திராவிடர்களின் சாதனை என்ன? அனைத்து உரிமைகளையும் பறி கொடுத்துவிட்டு மாநில உரிமைகளை பற்றிபேசுகிறார்கள்.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் நாகரிகத்தை, ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கின்றனர். சென்னையில் மழை நீரை வடிக்க முடியாமல், மக்கள் கொந்தளிக்கின்றனர். இதை திசைதிருப்ப திராவிட பிரச்னையை கிளப்புகின்றனர்.
இந்தியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் திணித்தது திராவிட ஆட்சி. முதலில் இந்தியை திணித்தார்கள். பிறகு இந்திக்காரர்களை திணித்தார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் எந்த உடன்பாடும் இல்லை. திராவிடம் என்ற சொல் தமிழ் கிடையாது. மாடல் என்ற சொல்லும் தமிழ் கிடையாது. பிறகு திராவிட மாடலில் எப்படி தமிழ் வாழும். திராவிடம் என்ற சொல்லே சமஸ்கிருதம்தான் என்று சீமான் கூறினார்.
இதையும் படிங்க 40 எம்பிக்கள் இருந்தும் புலம்புவது ஏன்? திமுகவுக்கு சீமான் கேள்வி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com