RP Udayakumar: தமிழ்நாட்டின் முதுகெலும்பை உடைத்துவிட்டு, தலைகுனிய விடமாட்டேன் என்கிறார்கள். மு.க ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது” என முன்னாள் தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
RP Udayakumar: தமிழ்நாட்டின் முதுகெலும்பை உடைத்துவிட்டு, தலைகுனிய விடமாட்டேன் என்கிறார்கள். மு.க ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது” என முன்னாள் தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
Published on: September 19, 2025 at 1:47 pm
மதுரை, செப்.19, 2025: மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நேற்று (வியாழக்கிழமை) பேட்டியளித்தார். அப்போது, “தி.மு.க. தோல்வி பயத்தில் காணப்படுகிறது” என்றார். தொடர்ந்து பேசிய ஆர்.பி உதயகுமார், “மு.க. ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை நினைத்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கு தோல்விப் பயம் வந்துவிட்டது.
வெற்றியை நோக்கி நகரும் அதிமுக
தி.மு.க. மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். இதனால் அ.தி.மு.க. வெற்றியை நோக்கி நகர்கிறது. மக்களின் பிரச்னையை கேட்பதற்கு மு.க. ஸ்டாலினுக்கு நேரம் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு நேரம் வந்துவிட்டது. நாம் எடப்பாடி பழனிசாமி கரத்தினை வலுப்படுத்த வேண்டும். ஆளும் தி.மு.க.வினர் உள்ளுக்குள் பயத்துடன் தேர்தலை சந்திக்கின்றனர். ஆனால் வெளியே பயமில்லாதது போல் காட்டிக்கொள்கின்றனர்” என்றார்.
முதுகெலும்பை உடைத்துவிட்டு..
தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு மாற்று சக்தி அ.தி.மு.க.தான். தமிழ்நாட்டின் முதுகெலும்பை உடைத்துவிட்டு தலைகுனிய விடமாட்டேன்” என்கிறார்கள் என்றார்.
இதையும் படிங்க : மக்களை ஏமாற்றுவதே திமுகவின் கொள்கை.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com