16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ; வானிலை ஆய்வு மையம் தகவல்

RMC Chennai | தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: November 13, 2024 at 5:47 pm

RMC Chennai | கடந்த 3 நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் தலா 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

13.11.2024

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள்

13.11.2024 மற்றும் 14.11.2024

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

13.11.2024 மற்றும் 14.11.2024

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க சர்வே பணியில் மாணவிகள்; விஷ ஜந்துகள் கடித்து மருத்துவமனையில் அனுமதி: டிடிவி கண்டனம்!

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்
Anbumani Ramadoss

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது எப்படி?
Ayatollah Ali Khamenei killing

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com