Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published on: April 14, 2026 at 12:17 pm
புதுடெல்லி, ஏப். 14 2026: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த புனிதமான நாளில் அனைவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தால் நிரம்பியிருக்க வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த புனிதமாக தினத்தில் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமைய நான் பிரார்த்திக்கிறேன்.
Best wishes on the special occasion of Puthandu. pic.twitter.com/JK6O44gnEm
— Narendra Modi (@narendramodi) April 14, 2026
இந்தச் சிறப்பு நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களைக் கொண்டாடுகிறது. இது தமிழ் கலாச்சாரத்தின் பெருமையைப் போற்றும் ஒரு தருணம். அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம் மற்றும் பக்தி ஆகியவற்றின் செழுமையான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
இந்தச் சிறப்பு நாள் நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ் கலாச்சாரத்தால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார்.
சிறப்பு வாய்ந்த புத்தாண்டு தினத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த அற்புதமான ஆண்டாக அமைந்திட பிரார்த்திக்கிறேன்.@VPIndia @CPR_VP pic.twitter.com/4gmiT2ML6u
— Narendra Modi (@narendramodi) April 14, 2026
மேலும், சிறப்பு வாய்ந்த புத்தாண்டு தினத்தில் பிரதமர் மோடி குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக அரசு நிர்வாகம் பற்றி பேசத் தயாரா? மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com