Nainar Nagendran: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஹெல்மெட் வழங்கினார்.
Nainar Nagendran: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஹெல்மெட் வழங்கினார்.
Published on: September 27, 2025 at 8:38 pm
சென்னை, செப்.27, 2025: தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்தியில், “பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, இன்று (சனிக்கிழமை) சென்னையில் உள்ள ஐஸ் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணியாமல் இருப்பதால் விபத்துக்கு உள்ளாகுபவர்கள் மோசமாகப் படுகாயம் அடைவதும், சில நேரங்களில் உயிரிழக்க நேரிடுவதையும் மக்களுக்கு எடுத்துரைத்தேன். அதேசமயம், தலைக்கவசம் விபத்து நேரங்களில் உயிரைக் காக்கும் விதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த, மாநில செயலாளர் சதீஷ் குமார் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்தேன். இந்நிகழ்வில், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தியும், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனும், ஓ.பி.சி அணி மாநில அமைப்பாளர் வீர. திருநாவுக்கரசும், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிரியும் உடனிருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுத்தவர் மு.க ஸ்டாலின்.. காதர் மொகிதீன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com